கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் : நெகிழ வைத்த நிஜம்!
ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போது ரசிகர்களை சந்திப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு முன்னணி நடிகர்கள் மீது எப்போதுமே வைக்கப்படுவது தான்.
ஆனாலும் சில சமயங்களில் சில ரசிகர்களுடைய முக்கியமான ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவர்களை நேராகச் சென்று சந்திக்கிற அபூர்வங்களும் நடக்கத்தான் செய்கிறது.
அப்படித்தான் சமீபத்தில் தனது ரசிகை ஒருவரின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் தீவிர ரசிகை தான் 9 வயதே ஆன சிறுமி கோடீஸ்வரி. ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் இருக்கும் கோடீஸ்வரி தன் வாழ்நாளில் ஒரு தடவையாவது தனுஷை நேரில் சந்தித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இந்த தகவல் தனுஷின் காதுகளை எட்டவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோடீஸ்வரியை அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவனைக்கே நேரில் சென்று சந்தித்தார். அவர் டாக்டர்களிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, அவரோடு பேசி அந்தச் சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
‘‘என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு பிடித்த தனுசுடன் நான் நிறைய புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இதை என்றுமே மறக்கமுடியாது. அவருக்கு எனது நன்றிகள்’’, என்று சிறுமி கோட்டீஸ்வரி கூறியுள்ளார்.
நேற்று தான கிரேட் தனுஷ்!