போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா

Get real time updates directly on you device, subscribe now.

தேர்ந்த நடிப்புக்கு பெயர் போன நடிகை ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

பவானி என்டர்டெயின்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தில் ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த ‘தில்’ சத்யா இப்படத்தை இயக்குகிறார்.

ஆக்‌ஷன், த்ரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது.