ஒன்றல்ல… இரண்டல்ல… 15 முத்தக் காட்சிகள் : சித்தார்த்தை திணறடித்த ஆண்ட்ரியா!
30 வயதைத் தாண்டி விட்டாலே கதாநாயகிகளை ஆண்டி என்று அழைக்கத் தொடங்கி விடுவார்கள் ரசிகர்கள்.
ஆனால் ஆண்ட்ரியா 30 வயதைக் கடந்த பிறகு தான் அதே ரசிகர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்திருக்கிறார். தரமணி படத்தில் நடிப்பால் அசர வைத்தவர் அடுத்து சித்தார்த் ஜோடியாக நடித்திருக்கும் அவள் படத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.
வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் சித்தார்த் தன் எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை மிலிந்த் இயக்கியிருக்கிறார். இதில் நாயகனாக நடித்திருப்பதோடு படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் சித்தார்த்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய சித்தார்த், “நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களை தாண்டியது. ஒரு உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம்.
நல்ல ஒரு ஹாரர் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை இந்த படத்தின் மூலம் செய்திருக்கிறோம். இந்த படத்துக்கு பின் இயக்குனர் மிலிந்த் பேசப்படுவார். படத்தின் நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ரங்தே பசந்தி படத்துக்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்த படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். ஜில் ஜங் ஜக் படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் ஹாரர் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வரும் நவம்பர் 3ஆம் தேதி முதல் அவள் ரசிகர்களை மிரட்டுவாள்” என்றார்.
பின்னர் பேசிய நாயகிஆண்ட்ரியா, ”எனக்கு மட்டும் எப்படி நல்ல நல்ல, வித்தியாசமான படங்கள் அமைகிறது என்று தெரியவில்லை. அது எனக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. என் கேரியரில் தரமணியை தொடர்ந்து ‘அவள்’ படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த படம் ரொம்பவே பயமுறுத்தும். அதனால் நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன் என்றார்.
இந்த அவள் படம் பேய்பப்டம் என்பதால் இதை நான் பார்க்க மாட்டேன் என்று ஆண்ட்ரியா சொன்னாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்.
படத்தில் ஏ.சி. குளிரையும் தாண்டிய முத்தக்காட்சிகள் எக்கச்சக்கம் உண்டாம். குறிப்பாக ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் சித்தார்த்துக்கு ஆண்ட்ரியா 7 முத்தங்கள் கொடுக்கிறாராம். இப்படியே படம் முழுக்க சுமார் 15 முத்தக் காட்சிகள் இருக்கிறது என்கிறார்கள். அதுவும் சாதாரண முத்தமாக இல்லாமல் ஆங்கிலப் படங்களில் வருவதைப் போல லிப் டூ லிப் கிஸ் உள்ளிட்ட அழுத்தமான முத்தங்கள்.
இந்தக் காட்சிகளை நண்பர்களுடனே, குடும்பத்தினருடனோ தியேட்டரில் போய் பார்க்க வெட்க்கப்பட்டுத்தான் ஆண்ட்ரியா பேய்க்கு பயப்படுவேன் என்று ஒரு பதிலைச் சொல்லி தப்பித்திருக்கிறார்.