எமி ஜாக்சனுடன் நெருக்கம்? : மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அனிருத்

Get real time updates directly on you device, subscribe now.

Anirudh

”நாம விலகிப் போனாலும் சர்ச்சைகளும், சங்கடங்களும் நம்மைத் தேடி வருதே” என்று நொந்து புலம்புகிற சிச்சுவேஷனில் அனிருத்தை தள்ளி விடுவார்கள் போலிருக்கிறது.

வில் அம்பு திரைக்கதை டைப்பில் தான் சுற்றியிருப்பவர்களால் அவர் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

ஆண்ட்ரியாவுடன் லிப் டூ கிஸ் சர்ச்சையைத் தொடர்ந்து இன்னும் ஆறாமல் இருக்கும் பீப் சாங் விவகாரத்திலும் அவருடைய பெயர் அடிபட்டி பெரும் தலைவலியாக அமைந்தது.

IMG-20160221-WA0053கோர்ட், கேஸ் என்று சர்ச்சை பெரிதாக சில வாரங்களுக்கு முன்பு கோவை போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் ஆஜராகி விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த சூடு இன்னும் ஆறவில்லை அதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அனிருத்.

Related Posts
1 of 31

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த அனிருத்தை அந்த சர்ச்சையில் சிக்க வைத்திருப்பவர் நடிகை எமி ஜாக்சன்.

நேற்று முதல் எமி ஜாக்சனுடன் அனிருத் நெருக்கமாக இருக்கும் சில கவர்ச்சியான போட்டோக்கள் சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது.

அதில் எமி ஜாக்சன் அரைகுறை ஆடையுடன் இருக்க, அவரது கழுத்தை வளைத்து பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் அனிருத்.

வழக்கம் போல இதுவும் சர்ச்சையை கிளப்புமா? அல்லது அடங்கி விடுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.