மாஸ் ஹீரோ படம்னாலே இதுதான் இம்சை? : செம கடுப்பில் சமந்தா

சொன்னால் நம்ப மாட்டீர்கள். தமிழிலும், தெலுங்கிலும் சேர்த்து கைவசம் அரை டஜனுக்கு குறையாமல் படங்களை வைத்திருக்கிறார் சமந்தா.
எல்லாமே பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்கள்! அப்படி இருந்தும் செம கடுப்பில் இருக்கிறார் அந்த அழகு தேவதை.
2016ம் ஆண்டு பிறந்து முழுதாக இரண்டு மாதங்கள் முடியப்போகிற தருணத்திலும் கூட தனது கைவசம் இருக்கின்ற படங்கள் ரிலீசாகாமல் தள்ளிக்கொண்டே போகிறதே என்பது தான் அவருடைய கடுப்புக்கு காரணம்.
தெலுங்கில் திரு விக்ரம் இயக்கத்தில் ‘அ ஆ’ படமும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் ‘பிரம்மோற்சவம்’ படமும் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் ரிலீசாகும் என்று சொல்லுகிறார்கள்.
அதே போல தமிழில் விஜய்யுடன் ‘தெறி’, சூர்யாவுடன் ’24’ படமும் ரிலீசுக்கு தயாராக இருந்தும் இன்னும் ஆடியோ பங்ஷனைக் கூட நடத்தவில்லை.
இந்த படங்களில் எல்லாம் சமந்தா சொதப்பல் இல்லாமல் கால்ஷுட்டுகள் கொடுத்து நடித்து பல மாதங்கள் ஆகி விட்டதாம். நடித்த படங்களில் ஏதாவது ஒன்றாவது ரிலீசானால் தானே புதுப்படங்களை கமிட் செய்யும் போது சம்பளத்தை சில லட்சங்களை உயர்த்தலாம். ஆனால் படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகாததால் புதுப்படங்களில் அவருடைய சம்பளத்தை உயர்த்த முடியவில்லையாம்.
இதனால் கடுப்பில் இருக்கும் அவர் தான் நடித்த படங்களின் இயக்குநர்களுக்கு அவ்வப்போது போனைப்போட்டு ரிலீஸ் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
”இதுக்குத்தான் மாஸ் ஹீரோவோட படங்கள்ல நடிக்கக் கூடாது, ரொம்ப இம்சையா இருக்கு” என்று கமெண்ட் வேறு அடித்துக் கொள்கிறார்.