வரதட்சணையாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ : நகைக்கடை அதிபரின் பேத்தியை மணக்கிறார் அனிருத்!

Get real time updates directly on you device, subscribe now.

anirudh1

ளவட்டங்கள் மனசுக்கு பிடித்த இசையமைப்பாளராக இருந்தாலும் சமீபகாலமாக அனிருத்தைப் பற்றி லீக்காகும் எல்லா சமாச்சாரங்களும் ‘ச்ச்சீய்’ ரக சமாச்சாரங்களாகவே இருக்கிறது.

இதற்கும் பிரபலத்தின் சொந்தக்காரரே இப்படியிருக்கிறாரே என்பது தான் அதில் இருக்கிற லேபிள் என்பதால் அதற்கு சொந்தக்காரரான ரஜினியே அனிருத்தைக் கூப்பிட்டு அறிவுரையெல்லாம் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்.

ஆனாலும் அவருடைய நேரமோ என்னமோ தெரியவில்லை. நாட்டில் எந்த ஒரு பரபரப்பான பிரச்சனை நடந்தாலும் அதே நேரத்தில் தவறாமல் ஒரு வீடியோ லீக்காகி அனிருத்தின் மானத்தை கப்பலேற்றி விடுகின்றன.

ஆண்ட்ரியாவில் ஆரம்பித்து சுசி லீக்ஸ் வரை அனிருத் பெயர் அடிபடாத சமாச்சாரங்களே இல்லை.

இதற்கு மேலும் தம்பியை விளையாட்டாக விட்டு வைத்திருந்தாலும் இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கி விடுவாரோ என்கிற பயம் அப்பா ரவி ராகவேந்திராவுக்கு வந்து விட ரஜினியின் ஆலோசனையின் பேரில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.

Related Posts
1 of 10

அவர்களின் தேடலுக்கு சென்னையின் பிரபல நகைக்கடையான NAC Jewellers நகைக்கடை அதிபரின் பேத்தியை பேசி முடித்திருக்கிறார்களாம்.

மணப்பெண்ணும் அனிருத்தின் தீவிர ரசிகைகளில் ஒருவர் என்பதால் அவருடைய முந்தைய காலம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓ.கே சொல்லியிருக்கிறார்.

இந்த திருமணத்துக்காக பெண் வீட்டார் சார்பில் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை தருவதற்கு பெண் வீட்டார் சம்மதித்து விட்டார்கள்.

KNACK STUDIOS என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டூடியோவில் டால்பி அட்மாஸ் மிக்ஸிங், ஆர்க்கெஸ்ட்ரா ரெக்கார்டிங், டப்பிங், வி.எப்.எஸ், டிஐ என லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களும் இருக்கிறது.

மாப்பிள்ளையும் பிரபல இசையமைப்பாளர் என்பதால் அவருக்கு இதைத்தவிர வெறொரு சிறந்த சீதனம் வேறு இருக்க முடியாது என்பதால் இப்படி ஒரு முடிவாம்.