அன்னபூரணி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

உணவு அரசியலை கமர்சியலாகப் பேசியுள்ள ஒரு படம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவள் அன்னபூரணி. (நயன்தாரா) சிறு வயது முதலே உணவுகள் சமைப்பதில் பேரார்வம் கொண்ட நயன்தாராவுக்கு இந்தியாவிலே பெரிய செப் ஆன சத்யராஜ் போல் ஆகவேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்திற்கு தன் சாதி முதல் பல முட்டுக்கட்டைகள் வரிசை கட்ட நயன்தாரா எப்படிச் சமாளித்து இலக்கை அடைந்தார் என்பதே படத்தின் கதை

Related Posts
1 of 2

ஸ்ரீரங்கத்து தேவதையாக ஜொலிக்க வேண்டிய நயன்தாரா ஓவர் மேக்கப்பால் திகட்ட வைக்கிறார். நடிப்பில் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். ஜெய்க்கு கொடுத்துள்ள கேரக்டரை யாராலும் செய்திருக்க முடியும். இருப்பினும் ஒரு காட்சியில் நல்ல ஸ்கோரிங் செய்துள்ளார். அச்யூத்குமாரின் நடிப்பு படத்தின் நல்ல மைலேஜாக அமைந்துள்ளது. ஆங்காங்கே கிங்ஸ்ட்லி அடிக்கும் பன்ச் ஓகே ரகம்

தமன் பின்னணி இசையில் பின்னிய அளவிற்கு பாடல்களை மனதில் நிற்கும்படி உருவாக்கவில்லை. இருந்தும் படம் பார்க்கும் போது அந்தப் பாடல்கள் எல்லாம் பாஸாகிவிடுகின்றன. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு கிராண்டாக அமைந்துள்ளது தான். இருந்தும் சிஜி ஷாட்ஸ் எல்லாவற்றிலும் இன்னும் சரியான படி க்ரீன்மேட் அமைத்து அவர் எடுத்திருக்கலாம். CG வொர்க் வெரி பூர்.

நயன்தாரா கேரக்டர் மூலமாக இந்துமதம் உணவை எப்படி அரசியலாக பயன்படுத்துகிறது என்பதை அழகாகப் பேசியுள்ளார் அறிமுக இயக்குநர் நிலிஷ் கிருஷ்ணா. முன்பாதியில் தெளிவாக சென்ற திரைக்கதை பின்பாதியில் மிகவும் ஈசியாக யூகிக்கும் படி அமைந்திருப்பது சின்ன மைனஸ். உணவுக்குள் மதத்தையும் அரசியலையும் திணிப்பது அறமல்ல என்று சொன்னதிற்காகவே அன்னபூரணியை ஒருமுறை ரசிக்கலாம்
3/5