O2- விமர்சனம்
புதைந்த பேருந்துக்குள் மூச்சுக்காற்றுக்காக போராடும் நயன் அவர் மகன் உள்ளிட்ட இன்னும் சிலர் எப்படி மீள்கிறார்கள் என்பதே O2-வின் கதை.
ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் உயிர்வாழும் தன் மகனை நயன்தாரா தனியார் பேருந்தில் கோவையில் இருந்து கொச்சினுக்கு அழைத்துச் செல்கிறார். அந்தப்பேருந்து மண்சரிவில் சிக்கி புதைந்து போக..எப்படி அனைவரும் மீளப்போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிவிட்டு படம் துவங்குகிறது. மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் லைன் கிடைத்தும் பலவீனமான திரைக்கதை அமைத்து சொதப்பியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்
பஸுக்குள் நடக்கும் பரபர காட்சிகளில் நயன்தாராவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும் எந்தக் கதாப்பாத்திரத்தோடும் நாம் ஒன்ற முடியவில்லை. சிறுவன் ரித்விக் நன்றாக நடித்துள்ளான். ஆடுகளம் முருகதாஸ் உள்பட நடிகர்கள் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை
படத்தில் தமிழ் அழகனின் ஒளிப்பதிவு தனித்துவமாக இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் திரில்லருக்கான வெயிட்டேஜ் கொடுக்கிறது
படத்தின் பெரிய மைனஸ் அழுத்தமில்லாத திரைக்கதை தான். கதையில் நடக்கும் சம்பவங்களுக்குள் நம்மை பொருத்திக் கொள்ளவே முடியவில்லை.
மூச்சுக்காற்றை அடிப்படையாக கொண்ட கதையை, கீச்சு கீச்சு மனநிலையில் அனுகியிருப்பதால் O2-வில் நிறைய ஓட்டை
2/5