கனெக்ட்- விமர்சனம்

கொரானா காலகட்டத்தில் நாமெல்லாம் ஆன்லைனிலே வாழ்ந்து வந்தோம். அதை நினைவுப்படுத்தியும், அந்த லாக்டவுன் காலத்தில் பேய் பிடித்தால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதையும் யோசித்து படமாக்கியிருக்கிறார் அஷ்வின் சரவணன்
நயனின் மகளுக்கு லாக்டவுன் நாட்களில் ஆன்லைன் மூலமாகவே பேய்பிடித்துவிடுகிறது. அதை ஆன்லைன் மூலமாகவே விரட்ட முயற்சிக்கிறார்கள். முயற்சியின் முடிவு என்ன என்பதற்கான விடை தான் கனெக்ட் படத்தின் திரைக்கதையாக விரிகிறது
படத்தில் பெரும்பாலான காட்சிகள் மிட்& குளோசப் ஷாட்களிலே தான் நகர்கிறது. அதனால் நடிப்பதில் நிறைய சவால்கள். அவற்றை எளிதாக கடந்துள்ளார் நயன்தாரா. அவர் கேரக்டர் அழுத்தமாக எழுதப்படாவிட்டாலும் அவரின் நடிப்பு அழுத்தமாகவே இருக்கிறது. அனுபம் கேர் பேய் விரட்டும் நல்ல பாதிரியாராக மிரட்டியிருக்கிறார். நயனின் மகளாக ஹனியா நஃபிஸா நல்ல தேர்வு. மிகவும் மெச்சூட் ஆன நடிப்பால் கவர்கிறார். சத்யராஜ் கேரக்டர் ஒரு சிறிய சப்போர்டிங் கேரக்டர் என்ற அளவிலே கடந்து போய்விடுகிறது. வினய் குட்டி கேரக்டர் என்றாலும் கெட்டியாக நடித்துள்ளார்
படத்தை மொத்தமாக தாங்கி நிற்பது இசை அமைப்பாளர் பிரித்வி சந்திரசேகரும், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சார்யாவும் தான். இசையும் விஷுவலும் படத்தை வேறோர் தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. Sound mixing & SFX இரண்டும் மிரட்டல் ரகம். டெக்னிக்கல் டீமை ஸ்ட்ராங்காக வடிவமைத்து மேக்கிங்கில் அஷ்வின் சரவணன் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து கதை& திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். சில ஷாக்கிங் ஷாட்கள் மட்டும் ஹாரர் படத்திற்கு போதும் என்று முடிவு கட்டிவிட்டார் போல. கதையின் மெயின் கதாப்பாத்திரங்கள் யாருமே நம்மை உலுக்கி விடும் மாந்தர்களாக பரிணமிக்கவே இல்லை. பேய் மீது, அல்லது பேய் பிடித்தவர் மீது என யார் மீதும் நமக்கு எமோஷ்னல் அட்டாச்மெண்ட் ஏற்படாததால் கனெக்ட் கதையாக நமக்குள் கனெக்ட் ஆகவில்லை. விஷுவல் ட்ரீட்டிற்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்
2.75/5