இப்போதான் அப்பா சிங்கம் மாதிரி இருக்கார் : கெளதமியை நோகடித்த கமலின் இளைய மகள்!

Get real time updates directly on you device, subscribe now.

akshara-haasan

மலுடன் 13 வருடங்கள் தாலி கட்டாமல் வாழ்ந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் நடிகை கெளதமி.

மகளின் எதிர்காலம் பற்றிய அக்கறையால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.

இருவரின் பிரிவைப் பற்றியும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனும், இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கால அடக்கியே வாசித்தார்கள்.

இடையில் கமலுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஷயமும் எல்லோருக்கும் தெரியும். கூடவே கெளதமியின் பிரிவும் அவரை வாட்டி வதைக்கும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

Related Posts
1 of 22

ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்.

அப்பா கமல் எப்படியிருக்கிறார் என்று அக்‌ஷரா ஹாசனிடம் ரசிகர் ஒருவர் நலம் விசாரித்திருக்கிறார். அதற்கு இப்போ தான் அப்பா சிங்கம் மாதிரி கம்பீரமா இருக்கார் என்று பதில் கொடுத்திருக்கிறார் அக்‌ஷரா.

அதாவது கெளதமியின் பிரிவுக்குப் பிறகு அப்பா நன்றாக இருப்பதாக பொருள்வரும்படி கருத்து தெரிவித்து கெளதமியை மறைமுகமாக நோகடித்திருப்பதாக கருதுகிறார்கள் ரசிகர்கள்.

சிங்கத்துக்கு பொறந்ததாச்சே…?