எல்லாருக்கும் ஆசையிருக்கு… : சிவகார்த்திகேயனுக்கு அமைஞ்சிடுச்சு!

சமீபத்தில் ரிலீசான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
இந்த பாசிட்டீவ்வான தகவல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் காதுகளை எட்டவும் சாய்பாபா பக்தரான அவர் சென்ற வியாழக்கிழமை செண்டிமெண்ட்டாக விக்னேஷ் சிவனை கூப்பிட்டு அட்வான்ஸ் கொடுத்து கமிட் செய்து விட்டார்.
இதையடுத்து படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் தான் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
‘நானும் ரவுடி தான்’ படம் ஹிட்டானதில் நயன்தாரா செண்டிமெண்ட்டும் இருப்பதால் மீண்டும் அவரையே இதிலும் கதாநாயகியாக்கியிருக்கும் விக்னேஷ் சிவன் இன்னொரு கதாநாயகியாக த்ரிஷாவை கமிட் செய்திருக்கிறார்.
நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தாலும் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஜோடிகிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயமாக இருந்து வந்தது. அது லேட்டஸ்ட்டாக அவரது மேனேஜர் ராஜா தயாரித்து வரும் படம் வரை தொடர்ந்தது. சமந்தா, ஸ்ருதிஹாசன் இருவரும் கூட பேக்கடித்தார்கள்.
இப்படி பல முன்னணி நடிகைகளும் அவருடன் ஜோடி சேரத் தயங்கி வந்த நேரத்திலும் ஹன்ஷிகா தான் ‘மான் கராத்தே’ படத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்தார். இதை அந்தப் படத்தின் ஆடியோ பங்ஷனிலேயே சொன்ன சிவகார்த்திகேயன் இவனுக்கு ஹன்ஷிகா ஜோடியா என்று கூட என் காதுபடவே பேசுகிறார்கள் என்று வருத்தப்பட்டார்.
அப்படி வருத்தப்பட்ட சிவகார்த்திகேயனுடன் தான் இப்போது நயன்தாரா – த்ரிஷா என முன்னணி நடிகைகளே ஜோடியாக நடிக்க முன் வந்திருக்கிறார்கள்.
மேற்படி இருவருடனும் ஒரு படத்திலாவது ஜோடி சேர மாட்டாமோ என பல இளம் ஹீரோக்களும் தவமிருந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனுக்கு அது தானாக அமைந்திருக்கிறது.
எல்லாருக்கும் ஒரு நேரம் வரும், அது சிவகார்த்திகேயனுக்கும் வந்திருக்கு…!!!