‘வட சென்னை’ வரும்; ஆனா அதைப்பத்தி ஜீவாகிட்ட கேட்காதீங்க!

பேச்சுவார்த்தை நடக்க ஆரம்பித்த நாட்களை கணக்கிட்டால் எப்போதோ ஆரம்பித்து எப்போதோ ரிலீசாகியிருக்க வேண்டிய படம் வெற்றிமாறனின் ‘வட சென்னை’.
முதலில் சிம்பு தான் அந்தப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று தனது ஆஸ்த்தான ஹீரோவான தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்தார் வெற்றிமாறன்.
அப்போதும் கூட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் காலம் தாழ்த்திய நிலையில் இனி ‘வட சென்னை’ வரவே வராது என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.
வழக்கமான படமாக இல்லாமல் ‘வட சென்னை’யின் நிஜமாக முகத்தை காட்சிப்படுத்தும் படமென்பதால் திரைக்கதை அமைப்பதில் கால அவகாசம் எடுத்துக் கொண்ட வெற்றிமாறன் படத்தை இரண்டு பாகங்களாகவும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.
தனுஷ் ஹீரோவாக நடித்தாலும் இதே படத்தில் ஜீவாவையும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்கிறார்கள்.
அதற்கான பேச்சுவார்த்தை முடிந்த நிலையிலும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருப்பது ஜீவாவுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றே தெரியாத நிலையில் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கக் கேட்டார்கள். ஆனால், படம் எப்போது தொடங்கும் என்று யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட படத்தில் நான் எப்படி நடிப்பது? என்றதோடு விடாமல் ‘வட சென்னை’ பற்றி ஏதாவது கேட்பதாக இருந்தால் என்னிடம் கேட்காதீர்கள், அதை தனுஷிடம் கேளுங்கள் என்று காட்டமாகிறார் ஜீவா.
இதே படத்தில் தான் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.
‘வட சென்னை’ பற்றி ஜீவாவின் காதுகளுக்கு இப்படிப்பட்ட அப்டேட்டுகள் போய்க்கொண்டிருக்க இப்போது படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகளை கசிய விட்டுக் கொண்டிருக்கிறது மீடியாக்கள்.
அதாவது உண்மையாக இருக்கட்டும்!