இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் ‘எம்பிரான்’

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் நடித்த ரேஜித் கதாநாயகனாக நடிக்க, பஞ்ச வர்ணம் பிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் படம் தான் ‘எம்பிரான்’.

நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், நடனம் தீனா மற்றும் விஜி.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர்.

த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.