ரிலீஸ் நேரத்தில் கூட உதவி செய்யாத பெரிய ஹீரோக்கள்! : அருண்பாண்டியன் ஆதங்கம்

Get real time updates directly on you device, subscribe now.

arun1

‘சவாலே சமாளி’ படத்தை தயாரித்திருக்கும் நடிகர் அருண்பாண்டியன் அப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷனில் இப்போதுள்ள இளம் ஹீரோக்களை ஒரு பிடி பிடித்தார்.

அவர் பேசியதாவது… முன்பெல்லாம் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ஈஸியாக இருந்தது. பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், நடிகர்கள் அனைவருக்கும் படத்தயாரிப்பில் பங்கு இருக்கும்.

ஆனால் இப்போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத் தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பளாருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட விற்பதில்லை. அனைத்தும் தயாரிப்பாளர் தலையில் தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்.

இந்த படத்தை நானே சொந்தமாக உலக முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன் இதை கேள்விப்பட்ட அசோக் செல்வன், பிந்து மாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் தலா ஐந்து லட்சத்தை விட்டுத் தருவதாக கூறினார்கள்.

ஆனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன். இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அந்த படத்தின் வெளியீட்டின் போது அந்த தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன் வருவதில்லை என்றார் ஆதங்கத்தோடு…

இதுக்கெல்லாம் அசர்றவங்களா நம்ம ஹீரோக்கள்?