கேப்டன் மில்லர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

அதிகாரத்திற்கு எதிரான வன்முறை கலந்த அரசியலைப் பேசுகிற படம் கேப்டன் மில்லர்

பாரதியாரின் சுதந்திர கவிதைகளின் வீச்சு மக்களிடம் பரவலாக சென்று சேர்ந்த காலக்கட்டத்துக்குள்ள கதை இது..அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம். ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ். ஆங்கிலேயர்கள் ஒருபுறம் சுதந்திர வேட்கை கொண்ட மக்களை அடித்து ஒடுக்கிறார்கள். உள்ளூரில் ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு அடங்கினாலும் எளிய மக்களை அவர்களும் அடிமைப்படுத்துகிறார்கள். இச்சூழலில் தனுஷ் பல அதிரடியான முடிவுகளை எடுக்கிறார். அதன் விளைவுகள் என்னென்ன? என்பதாக படம் விரிகிறது

நடிப்பில் தானொரு கேப்டன் என்பதை தனுஷ் நிரூபிக்கும் மற்றொரு படம் இது. பல காட்சிகளில் ஒன்மேன் ஆர்மியாக அசத்துகிறார் தனுஷ். பிரியங்கா மோகன் கேரக்டர் பெரிதாக எழுதப்படவில்லை. அதனால் அக்கேரக்டர் வீக் ஆகத்தான் இருக்கிறது. சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோரை இன்னும் நன்றாக யூஸ் பண்ணியிருக்கலாம். படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒகே ரகம்

Related Posts
1 of 3

படத்தில் அந்த காலகட்டத்திற்கான லைட்டிங் அமைத்து கேமராவில் அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். ஜிவி பிரகாஷின் இசை படத்தை ஜீவனுள்ளதாக்கியுள்ளது. பாடல்களும் கேட்கும் ரகம்

கோவில் நுழைவுப்போராட்டத்தை அடிப்படையாக வைத்து துவங்கிய இப்படம் அப்படியே பயணித்திருக்கலாம். எங்கங்கோ சென்று படம் பார்ப்பவர்களை டயர்ட் ஆக்கிவிட்டது படத்தின் நேர்த்தியற்ற திரைக்கதை. படத்தின் மேக்கிங்கில் மிரட்டியவர்கள் திரைக்கதையை நன்றாக அமைத்திருந்தால் நல்லதொரு அனுபவத்தை தந்திருக்கும்
2.75/5