கணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது’…!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘ என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்ட ரமணன். இவர் தான் ‘அப்பா ..வேணாம்ப்பா..’ என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.
கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேசும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது.
நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப்போனால்..குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்ற வித்தியாசமானகதைக் களத்தை துணிந்து தொட்டிருக்கிறார் இயக்குனர்.
வேல்ஸ் மூவீஸ் பேனரில் திரு.பழனிவேல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சினிமா மேல் தணியாத ஆசைகொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகின்றனர். வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ்கண்ணன் எடிட்டராகவும் , வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரபாரதி ,வெங்கடசுப்பு, நாக முருகேசன் எழுதி உள்ளனர்.
இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும்.