கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வியல் தான் ‘சீமத்துரை’

Get real time updates directly on you device, subscribe now.

வ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும்.

அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.

அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட கர்வம் ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் கொண்ட படமாக தயாராகி வருகிறது ‘சீமத்துரை’.

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிக்க, சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், ‘கயல்’ வின்சென்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘கிராமப் பின்னணி கொண்ட இப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும்’ என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.