எல்லாப் பிரச்சனைகளும் ஓவர் : ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘வாலு’ ரிலீஸ்!
சிம்பு நடித்த எந்தப் படமும் இத்தனை சோதனைகளை சந்தித்ததில்லை என்று ரசிகர்களே இரக்கப்படுகிற அளவுக்கு ‘வாலு’ பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.
கால்ஷீட் பிரச்சனை, பைனான்ஸ் பிரச்சனை எல பல பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்தித்து படத்தை எடுத்து முடித்து விட்டு திரும்பிப் பார்த்தால் சிம்புவுக்கு இரண்டு வயது கூடிவிட்டது.
‘போடா போடி’ படத்துக்குப் பிறகு சிம்புவுக்கும் எந்தப்படமும் ரிலீசாகாததால் இந்தப்படத்தை தான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்,.
படத்தை முடிக்கவே படாதபாடு பட்ட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு ரிலீஸ் நேரத்தில் தடுமாற்றம் வர, கடைசியில் சிம்புவின் அப்பா டி.ஆர் ரம்ஜான் தினத்தன்று வாலுவை ரிலீஸ் செய்யா முன் வந்தார்.
இதனால் கோர்ட்டு, கேஸ் என்று போய் கடைசியில் நீதிமன்றம் வாலு ரிலீசுக்கு தடை விதித்தது.
இப்போது வாலு ரிலீசுக்கு இந்த தடைகள் எல்லாம் விலகி வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வாலு படம் ரிலீசாகும் என்று டி.ஆர் தெரிவித்திருக்கிறார்.
வாலு ரிலீஸ் பிரச்சனை சுமூகமாக முடிய விஜய் தானாக முன் வந்து உதவி செய்திருக்கிறார்.
எப்படியோ படம் ரிலீசாகுதுல்ல… அதுபோதும்!