அவனே ஸ்ரீமன் நாராயணா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING : 3/5

ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் என்பவர்களுக்கு பச்சை விளக்கு காட்டுகிறது அவனே ஸ்ரீமன் நாராயணா. ராமாயண நாடகம் போடுபவர்கள் கொள்ளையடித்து புதைத்து வைத்த செல்வத்தை கொள்ளையடிப்பது யார் என்ற போட்டி தான் படத்தின் கதை. கூடவே அண்ணன் தம்பிகளான இரு வில்லன்களுக்கு இருக்கும் பிரச்சனையும் இவற்றை ஹீரோ எப்படி ஸ்மார்ட்டாக கேண்டில் செய்கிறார் என்பதும்

ராமராமா எனும் வில்லனுக்கு பெயர் வைத்து குசும்பு செய்தாலும் படம் நெடுக இந்துத்துவ நெடி இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் நெருடல் இல்லாமல் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக கடத்தியுள்ளார்கள்.

படத்தில் உள்ள நடிகர்களை குறிப்பிடும் போது எல்லோரின் குறிப்புகளையும் மொத்தமாக எடுத்துக்கொள்கிறார் ஹீரோ ரக்ஷித் ஷெட்டி. ஒவ்வொரு சீனிலும் மாஸ் சீன் காட்டுகிறார்..படத்தை ஒட்டுமொத்தமாக தூக்கிச் சுமக்கும் அவரின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் போரடிக்கவே இல்லை. அட்டகாசம் ப்ரோ. இடைவேளை வரை எங்கே என்று தேட வைத்த ஹீரோயின் ஷான்வி ஸ்ரீவஸ்தவா பின்பாதியில் படத்தில் சிறப்பான பங்கை வகித்து வசீகரித்திருக்கிறார். பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் நடிப்பில் கம்பீரம் காட்டுகிறார்கள்.

மூன்று மணி நேரத்திற்கு எட்டுநிமிடம் குறைவாக உள்ள படம் என்றாலும் நீளம் பெரிய குறையாக தோன்றவில்லை. படத்தை என்கேஜிங்காக வைத்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் அஜநீஷ் லோக்நாத்& சரண்ராஜ் ஆகியோரின் பின்னணி இசை. ஒவ்வொரு காட்சியிலும் அதிரடிக்கிறது. கரம் சாவ்லா ஒளிப்பதிவில் கே.ஜி.எப் டோன் தெரிந்தாலும் கதையை உள்வாங்க இந்த ஒளிப்பதிவே ஆதர்சம்.

கலை இயக்கத்தில் இருக்கும் பிரம்மாண்டம் கதையில் உள்ள லாஜிக் ஓட்டையிலும் இருக்கிறது. அம்மாம் பெரிய வில்லன் குருப்ஸுக்கு ட்ராமா டீம் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாது என்பதெல்லாம் என்ன..என்ன பாஸ்?

படத்தின் மேக்கிங் தான் படத்தின் ரியல் ஹீரோ..போலவே படத்தின் ஹீரோ ரக்ஷித் ஷெட்டி மேக்கிங்கை மீறிய மேஜிக் இந்த இரண்டு விசயங்களுக்காகவே படத்தை லாஜிக் மறந்து ரசிக்கலாம்.