‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ மே 22-ம் தேதி ரிலீஸ்!
ஜே.எஸ்.கே.சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் செவன் சிஸ் என்டர்டெய்ன்மெண்ட் பி.லிமிட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’.
அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார்.
‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ ஒரு சாதாரண போலீஸ் கதையல்ல, ஒரு பராக்கிரமம் பொருந்திய போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறி தனத்தை தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை.
அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதை கதை விவரிக்கிறது. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இப்படம் வருகிற மே 22ஆம் தேதி ரிலீசாகிறது.