’10 எண்றதுக்குள்ள’ படுதோல்வியாம்! : விக்ரமின் புதுப்படத்திலிருந்து விலகியது ஐயங்கரன்

நடிக்கிற படம் எதுவாக இருந்தாலும் உடல் உழைப்பைக் கொட்டுவதில் சளைக்காதவர் நடிகர் விக்ரம்.
அது ஷங்கரின் ‘ஐ’ படமாக இருந்தாலும் சரி, விஜய் மில்டனின் ’10 எண்றதுக்குள்ள’ படமாக இருந்தாலும் சரி!
‘ஐ’ படத்தின் கேரக்டரில் எந்தளவுக்கு எபோர்ட்டைப் போட்டிருந்தாரோ அதேமாதிரி தான் ’10 எண்றதுக்குள்ள’ படத்துக்கும் அந்த கேரக்டருக்கு தகுந்த எபோர்ட்டைப் போட்டிருந்தார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் விக்ரம் கேரியரில் படுதோல்விப் படமாக அமைந்து விட்டது.
ஆனால் இயக்குநர் விஜய் மில்டனோ இன்றுவரை அதை மறுத்துக்கொண்டு ”இல்லை இல்லை என்னோட படம் பெரிய ஹிட், நல்ல வசூல்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சரி அவர் சொன்னபடியே வைத்துக் கொண்டால் விக்ரமின் அடுத்த படத்துக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் இருந்திருக்க வேண்டும் தானே?
அதுதான் இல்லை. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த புதுப்படத்தின் தயாரிப்பிலிருந்து அதிரடியாக விலகியிருக்கிறது ஐயங்கரன் நிறுவனம்.
முதலில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்தது. அவரோ திடீரென்று ரஜினியின் கால்ஷுட் கிடைத்ததும் ‘கபாலி’ படத்தை தயாரிப்பதில் மும்முரமாகி விட்டார்.
இதனால் இந்தப்படத்தை தயாரிக்க ஐயங்கரன் முன் வந்தது. ஆனால் ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல், விக்ரம் ரசிகர்களையே திருப்திபடுத்ததாக படமாக வந்ததால் விக்ரமின் அடுத்த படத்தை எப்படி கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு நம்பி தயாரிப்பது என்று யோசித்திருக்கிறது ஐயங்கரன் நிறுவனம்.
அதன் விளைவே அந்த நிறுவனம் அதிரடியாக புதுப்பட தயாரிப்பிலிருந்து விலகியிருக்கிறது.
இருந்தாலும் வேறு சில பெரிய தயாரிப்பாளர்களுடன் படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்.