‘மல்டி ஸ்டார்’ படம்! : அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பாலா

Get real time updates directly on you device, subscribe now.

bala1

யக்குநர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பிரம்மாண்டமான மல்டிஸ்டாரர் திரைப்படம்

‘சேது’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா.

பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.

Related Posts
1 of 88

தற்போது சசிகுமார் நாயகனாக நடித்து பாலா இயக்கியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் 1000வது படம் இது. விரைவில் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகள் மும்முரமாகி இருக்கிறார் இயக்குநர் பாலா.

நடிகர்கள் ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, ராணா ஆகியோரை இணைத்து தமிழ் திரையுலகின் மிகப்பெரிய மல்டி ஸ்டார் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாலா.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க பாலா திட்டமிட்டு இருக்கிறார்.

முன்னணி நாயகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதால், தற்போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.