கசிந்தது ‘விஜய் 59’ டைட்டில் சீக்ரெட்! : உளறிக் கொட்டிய ஜி.வி.பிரகாஷ்

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

ட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59-வது படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. விஜய் நடித்த படங்களிலேயே மாதக்கணக்கில் டைட்டில் வைக்காமல் இழுத்தடிக்கப்படுவது இதுவே முதல் தடவை.

படப்பிடிப்பும் வேகமாக முடிகிற தருவாயில் தீபாவளிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும். அப்போது டைட்டில் ரகசியம் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏற்கனவே ‘காக்கி’, ‘மூன்று முகம்’ ஆகிய டைட்டில்களில் ஏதாவது ஒன்றை வைக்க நினைத்தார்கள். அதில் ‘மூன்று முகம்’ ரஜினி பட டைட்டில் என்பதோடு அதை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல ‘காக்கி’ பட டைட்டில் வேறு ஒரு இயக்குநரிடம் இருந்ததால் அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் சரிப்பட்டு வரவில்லை.

Related Posts
1 of 76

சரி அப்படியானால் படத்துக்கு எந்த டைட்டிலைத் தான் வைப்பார்கள் என்று நினைத்த நேரத்தில் தான் விஜய் பட டைட்டிலை வாய் தவறி உளறிக் கொட்டியிருக்கிறார் அப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

அட்லி டைரக்‌ஷன்ல விஜய் சாரோட ‘தாறுமாறு’ படத்துக்கு மறுபடியும் மியூசிக் பண்றதுல ரொம்ப சந்தோஷம் என்று பேட்டி ஒன்றில் சொல்லிவிட ஓஹோ அப்போ இதுதான் விஜய் 59 படத்தோட டைட்டிலா என்கிற சீக்ரெட் வெளியாகி விட்டது.

டைட்டில் ரகசியம் வெளியாகி விட்டாலும் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ எப்படியிருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் குறையவில்லை என்பது மட்டும் உண்மை.