தம்மு, தண்ணி இல்லாம ஒரு ஜீவா படம்! : அதுவும் ரொம்ப ஜாலியா..!!

Get real time updates directly on you device, subscribe now.

jiiva

யானையையும் தந்தத்தையும் பிரிப்பது எந்தளவுக்கு கஷ்டமோ? அதை விடக் கஷ்டம் ஒரு குவார்ட்டர் சொல்லேன் மச்சி என்ற டயலாக்கையும், ஜீவாவையும் பிரித்துப் பார்ப்பது!

காமெடியா, செம ஜாலியா ஒரு ஜீவா படம்னாலே அதுல ‘தண்ணி’க்கும், ‘தம்’முக்கும் இடமில்லாமல் இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட எந்த சமாச்சாரமும் இல்லாமல் போக்கிரிராஜா படத்தை இயக்கி முடித்திருக்கிறார் டைரக்டர் ராம்பிரகாஷ் ராயப்பா.

அறிவியலின் தேடலாக வந்து வெற்றிப்படமாகவும் அமைந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கியரின் இரண்டாவது படம் இது!

ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்க எதிர்நாயகனாக நடித்திருக்கிறாராம் சிபிராஜ்.

படத்துல ஜீவா ஒரு ஐடி பையனா வர்றார், அவருக்கும் ஹன்ஷிகாவுக்கும் லவ், அந்த லவ்வை எப்படியாவது கெடுத்து விடணும்னு சிபி ப்ளான் போடும் வில்லன் தான் சிபிராஜ் கேரக்டராம்.

Related Posts
1 of 20

ஜீவா சாரோட படம்னாலே அதுல தண்ணி தம்மை ரசிகர்கள் எதிர்பார்ப்பாங்க. ஆனா அது இந்தப்படத்துல இருக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி திரைக்கதையை வடிவமைச்சேன். அதுக்காக நெறைய டைம் எடுத்துக்கிட்டேன். சிபி வில்லன் கேரக்டர்ங்கிறதுனால அவர் மட்டும் படத்துல சிகரெடி பிடிப்பார்.

ஆனால் ஜீவா அதை தொடவே மாட்டேன். இருந்தாலும் அவரோட ட்ரேட்மார்க் காமெடியால படம் ரொம்ப ஜாலியாப் போகும். என்றவர் தயாரிப்பாளரைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

இந்தப்படத்தோட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இல்லேன்னா படம் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிருக்காது, படப்பிடிப்பு ஆரம்பிச்ச நாள்ல இருந்து முடியிற வரைக்கும் ரெஸ்ட்டே இல்லாம டே அண்ட் நைட்டா படப்பிடிப்பை நடத்தினோம். அதனால தான் ரெண்டே மாசத்துல ஷூட்டிங்கை முடிச்சிட்டோம் என்ற ராம்பிரகாஷ் அடுத்து சொன்னது தான் நம்பலாமா? வேண்டாமா ரகம்!

படத்துல ஜீவாவுக்கும் சிபிக்கும் ஒரு பைட் சீன், ரெண்டு பேருமே நிஜத்துல திக் ப்ரெண்ட்ஸ்ங்கிறதுனால ஜீவாவை அடிக்கிற சீன்ல சிபி சரியா அடிக்கல. உடனே நான் இது பத்தாது இன்னும் நல்லா ஓங்கி அடிங்கேன்னு சொன்னேன். அவரும் ஓங்கி அடிச்சார். வலி தாங்க முடியாம கீழ விழுந்து எந்திருச்சு வந்து பதிலுக்கு சிபியை அறைஞ்சுட்டார்.

அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை என்றார் கவலையாக…!