பெத்லகேம் குடும்ப யூனிட்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

பிரேமம், பிரேமலு, ஆட்டோகிராஃப் வரிசையில் ஒரு காதல் படம்

33 வயது தாண்டியும் திருமணம் முடிக்காமல் இருக்கிறார் நிவின்பாலி! அதற்கான காரணம் தன் காதலியின் மரணம். அந்தச் சோகத்திற்கு மருந்தாக பக்கத்து வீட்டிற்கு குடிவருகிறார் கல்லூரி மாணவி மமிதா பைஜு. வயது வித்தியாசமின்றி மமிதாவிற்கு நிவின்பாலி மேல் காதல் வருகிறது. முதலில் தயங்கும் நிவின்பாலி பின் ஒகே சொல்லிவிடுகிறார். எல்லாம் ஒகே என்ற இடத்தில் பல சிக்கல்கள் வருகின்றன. காதலர்கள் அவற்றை எப்படிக் கடந்தார்கள் என்பதே கதை

“இயல்பாக நடிக்க வேண்டுமா? நாடுங்கள் நிவின்பாலியை” என்று போர்ட் வைக்கும் அளவில் சிறப்பாக நடித்துள்ளார் ஹீரோ நிவின் பாலி சேட்டா! மமிதா பைஜு சொல்லவே தேவையில்லை. எமோஷ்னல் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் அதகளம் செய்துள்ளார். சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் பார்ட் உள்ளிட்ட பிற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்

இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் நல்ல பாடல்களை மட்டுமல்ல..நல்ல பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். அஜ்மல் சபுவின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது

கிரிஷ் AD, கிரன் ஜோசய்-ன் இருவரின் எழுத்துப்பங்களிப்பும் சிறப்பான ஒன்று. இரு மனதிற்குள் நிகழும் ஏக்கங்களை கொண்டாட்டங்களை துல்லியமாக திரையில் காட்டியுள்ளார் இயக்குநர். ஆல்ரெடி பிரேமலு படைத்தவராற்றே!

க்ளைமாக்ஸ் பாசிட்டிவ் தான் என்று முன்பே தெரிந்தாலும் அதை கலகலப்பாக நகர்த்திய சாமர்த்தியம் ரசிக்க வைக்கிறது.

நம்பி தியேட்டருக்குச் செல்லலாம் என்று சொல்வதற்கு தகுதியான படம்!
3.5/5