மஹத் ராகவேந்திரா நடிக்கும்’கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’!

Get real time updates directly on you device, subscribe now.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே ஒரே திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தக் கதை மேலும் இளமை துள்ளலாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெரியதிரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் பாடல்களும் வெளியாக இருக்கிறது.

Related Posts
1 of 2

இந்த திரைப்படத்தில் வில்லனாக ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘தங்கலான்’ சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும். பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. யோகிபாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளது. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் நித்யஸ்ரீயின் குரலில் தரண் இசையில், கு. கார்த்திக் வரிகளில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.