டபுள் ஹீரோக்கள் படங்களில் நடிப்பது மகிழ்ச்சி தான்! : பரத் பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

Untitled-2

டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ‘என்னோடு விளையாடு’ என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, நரேன் கந்தசாமி, படத்தின் நாயகர்கள் பரத், கதிர், நாயகிகள் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, இசையமைப்பாளர்கள் ஏ மோசஸ் மற்றும் சுதர்ஷன் எம் குமார், எடிட்டர் கோபி கிருஷ்ணா, சண்டை பயிற்சி இயக்குநர் ஓம்பிரகாஷ், பாடலாசிரியை கதிர்மொழி மற்றும் படத்தின் அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் பரத் பேசும் போது, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்த போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ஏனெனில் என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழு திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

Related Posts
1 of 4

இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து, அதை வெளியிடும் போது, அதன் ஆயுள் என்பது மூன்று நாள் தான் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சோசியல் மீடியா ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் கன்டெண்ட் கிளாரிட்டியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதைப்போல் படத்தின் ரீலிஸும் சரியாக அமைய வேண்டும். இதற்கு பின்னர் அப்படம் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். இதற்கு பின்னர் அந்த படம் இரண்டு வாரங்கள் வரை ஓடினால் தான் வர்த்தக ரீதியாக வெற்றியை அடையும். அத்தகையதொரு வெற்றியை இந்தப்படம் பெறும். ஏனெனில் ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதால் இப்படம் வெற்றி பெறும்.

என்னுடைய திரையுலக அனுபவத்தில் சொல்கிறேன், இயக்குநர் அருண் கிருஷ்ணசாமியின் நீட் மேக்கிங் அவரை ஒரு வெற்றிக்கரமான இயக்குராக வலம் வருவார். ஏனெனில் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியைப் பார்த்தவுடன் என்னுடைய நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது. படத்தின் திரைக்கதையை முழுமையான தேர்ச்சிப் பெற்ற படைப்பாளி போன்று கையாண்டிருந்தார். படத்தின் பலமே திரைக்கதை தான். எடிட்டர் கோபி கிருஷ்ணா எனக்கு போன் செய்து, படம் தனி ஒருவன் போல் கிரிஸ்ப்பாக இருக்கிறது என்ற பாசிட்டீவ்வான கருத்தை பகிர்ந்து கொண்டார்.

என்னுடைய திரையுலக பயணத்தில் ஏற்கனவே இரண்டு ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறேன். இது போன்ற இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்கும் போது, படத்தின் திரைக்கதையை சுமப்பதற்கு மற்றொரு தோளும் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி எப்போதும் எனக்கு இருக்கிறது. இதிலும் இருந்தது. அதே போல் படத்தில் நல்ல தமிழ் பேசும் நடிகைகள் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உடன் பணியாற்றியதும் மறக்க இயலாதது.

இப்படத்தில் ஒரு மெசேஜும் இருக்கிறது. குதிரைப் பந்தய சூதாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. இது தவறு தான். அதையும் மீறி ஆடுபவர்களுக்கு சொந்தம், பந்தம், நண்பர்கள், உறவு என்று யாருமே இருக்கக்கூடாது. மீறி இருந்தால் அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை இப்படம் சொல்கிறது.’ என்றார்.