பொம்பள கெட்டப் போடுறது ரொம்பக் கஷ்டம் : பரத்துக்கு கிடைத்த முதல் அனுபவம்

காதல், கமர்ஷியல், ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து பழக்கப்பட்ட பரத் முதல் முறையாக ஹாரர் படத்தில் ஹீரோவாகியிருக்கிறார்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கியிருக்கிறார்.
நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்..
இந்த படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள். மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த அகோரியாக நமீதா நடிக்கிறார். இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கரமான ஹாரர் படமாக பொட்டு உருவாகி உள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது. படம் விரைவில் வெளியாக உள்ளது. என்றார்.
முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பரத் “இந்தப்படத்துல நான் முதன்முறையாக பொம்பள கெட்டப் போட்டிருக்கேன். ஒரு ஆண் பெண் கெட்டப் போடுறது அவ்வளவு ஈஸி இல்லை. அந்தக் கெட்டப்போட படத்துல ஒரு பத்து, பதினைஞ்சி நிமிஷம் தான் வருவேன். ஆனால் அதுக்காக நான் ரெடியாக ரொம்ப டைம் எடுக்க வேண்டியதாகிடுச்சு’’ என்று படத்தில் பெண் கெட்டப்பில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.