‘காளிதாஸ்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘தீரன்’ கார்த்தி
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் கூடிய படங்களை இயக்கி பெரும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
இதற்கு அடிப்படையாக அமைந்த “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் இயக்குனர் சிவநேசன் தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட இயக்குனர் ஶ்ரீசெந்தில் அவர்களின் புதிய முயற்சியாக நடிகர் பரத் முற்றிலும் புதிய தோற்றதில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக தயாராகியிருக்கும் “காளிதாஸ்” திரைப்படம் பெறும் எதிர்ப்பார்ப்புடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.
இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை “தீரன்” கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ் ஆகியோர்களுடன் இணைந்து வெளியிட்டார்.