ஆண்டாள் விவகாரம் – ஹெச். ராஜாவை கழுவி கழுவி ஊற்றிய பாரதிராஜா!

Get real time updates directly on you device, subscribe now.

”தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் கடந்த 7ஆம் தேதி ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்த வைரமுத்து பேசிய கருத்து கடந்த சில தினங்களாக பெரும் சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து வைரமுத்து தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சு இழிவான பேச்சாக இருந்தது. அதைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிரான கருத்துகளை பலரும் தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஹெச். ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Related Posts
1 of 12

ஹெச்.ராஜாவை போன்றவர்களால் இந்தியா துண்டாடப்படப் போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், பஞ்சப் பாரரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ… என்றும்  கடுமையாக சாடியிருக்கும் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை இதோ…