300 தியேட்டர்களில் ஜீவாவின் “வரலாறு முக்கியம்”!

Get real time updates directly on you device, subscribe now.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி புரொடக்‌ஷனின் ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது. இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் டிசம்பர் 9, 2022-ல் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது மேலும் படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் கேரளத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான ஷான் ரஹ்மான் (‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ்) இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைய்லர் பார்வையாளர்களை ஈர்த்து, படம் குறித்தான எதிர்ப்பார்பையும் அதிகரித்துள்ளது. மேலும் 100% எண்டர்டெயினராக இருக்கும் என்ற உத்திரவாதத்தையும் ட்ரைய்லர் கொடுத்துள்ளது.

கமர்ஷியல் மற்றும் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரங்களை நடிகர் ஜீவா தேர்ந்தெடுத்து நடிக்கும் போது அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியையே தந்துள்ளன. அந்த வரிசையில் ‘வரலாறு முக்கியம்’ திரைப்படமும் பெரும்பாலான ரசிகர்களைக் கவரும் வகையிலான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ளது.

Related Posts
1 of 2

திறமையும் அழகும் ஒன்றிணைந்த நடிகைகளான காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரக்யா நாக்ரா ஆகியோர் படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விடிவி கணேஷ் மற்றும் மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் நகைச்சுவை மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைப்பார்கள். இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்து உள்ளனர்.

#VaralaruMukkiyam