‘ரேர் பீஸ்’ : ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜூக்கு கிடைத்த புதுப்பட்டம்!

Get real time updates directly on you device, subscribe now.

Bongu

க்களுக்கு விழிப்புணர்வைத் தருகின்ற அல்லது அவர்களை உஷார்படுத்துகின்ற கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் முன்னணியில் இருப்பவர் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ்.

இவர் நடித்த சதுரங்க வேட்டை படமே அதற்கு மிகப்பெரிய உதாரணம். ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படும் அப்படத்தைப் போலவே இன்னொரு பேசப்படக்கூடிய படமாக அவர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் தான் ‘போங்கு’.

ஆர்.டி. இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரித்துள்ள இப்படத்தில்

நட்ராஜூக்கு ஜோடியாக ருஹி சிங் நடித்துள்ளார். இவர் இந்தியில் ‘காலண்டர் கேர்ள்ஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். இவர்களுடன் அதுல்குல்கர்னி, ‘முண்டாசுபட்டி’ ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், மனிஷா, ‘பாவா’ லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

கார் திருட்டைப் பற்றி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தைப் பற்றி இயக்குநர் தாஜிடம் கேட்டபோது “எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாவது இல்லை. எல்லா குற்றங்களும் காலம்காலமாக இங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாதிரி அந்தக் குற்றம் நவீனமாக்கப்பட்டு புதிய பாணியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

குற்றங்களுக்கான ஆணி வேர் எது? யார் செய்தது? என்று பார்த்தால் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். சிறைக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி அந்த குற்றத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.

அப்படித்தான் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரின் திருட்டும் நடைபெறுகிறது. இந்தத் திருட்டு யாரால், எப்படி மேற்கொள்ளப்படுகிறது? என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்றார்.

காஸ்ட்லியான கார் பற்றிய கதை என்பதால் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியாவில் இருக்கிற அத்தனை காஸ்ட்லியாக கார்களுக்கும் பல லட்சம் ரூபாய் வரை வாடகை கொடுத்து வாங்கி படமாக்கி இருக்கிறார்களாம்.

இப்படத்தில் ரேர் பீஸ் என்றொரு பட்டம் ஹீரோ நட்ராஜூக்கு கொடுக்கப்பட்டிக்கிறது. அதைப்பற்றிக் கேட்டபோது அதற்கு காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் தான். என்னுடைய சந்துரங்க வேட்டை படத்தைப் பார்த்து அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அதில் தான் ரேர் பீஸ் என்றொரு வார்த்தை வரும். அதையே எனக்கு பட்டமாகப் போட்டு விட்டார். மற்றபடி எனக்கும் இந்த பட்டம் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் துளி கூட சம்பந்தமில்லை என்றார்.

இந்தப்படம் வரும் ஜூன் 2ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.