ஆம்பளைன்னா மீசையை முறுக்கணும்! : மகேஷ்பாபுவை மாற்றும் ஏ.ஆர்.முருகதாஸ்
சூர்யா மீசையில்லாமல் நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தை விட மீசையை முறுக்கிக் கொண்டு வந்த ‘சிங்கம்’ திரைப்படம் மூன்று பாகங்கள் எடுக்கிற அளவுக்கு மெகா ஹிட்டானது.
அந்தளவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீசை வைத்த ஹீரோக்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
இதை கணித்த ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவின் ரெகுலர் கெட்டப்புக்கு குட்பை சொல்லச் சொல்லியிருக்கிறார்.
ஹிந்தி அகிராவை முடித்த கையோடு மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிப்படம் ஒன்றை இயக்கத் தயாராகும் ஏ.ஆர்.முருகதாஸ் அந்தப் படத்துக்காக ஹீரோ மகேஷ்பாபுவை பெரிதாக மீசை வளர்க்கச் சொல்லியிருக்கிறார்.
மகேஷ்பாபு இதுவரை மீசை வைத்து முழுப்படத்தில் நடித்ததே இல்லையாம். தமிழ்ரசிகர்களுக்கு மீசை வைத்த ஹீரோவைத்தான் அதிகம் பிடிக்கும், அதுதான் ஆம்பளைக்கு அழகு என்கிற மனநிலையிலும் இருப்பதால் மகேஷ்பாபுவை அடர்ந்த மீசை மற்றும் தாடியோடு தான் முழுப்படத்திலும் நடிக்க வைக்கிறாராம்.
மகேஷ் பாபு மீசை, தாடியுடன் வந்தால் தமிழ் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பது மட்டுமல்ல, எப்போதுமே மீசையில்லாத மகேஷ்பாபுவைப் பார்த்த தெலுங்கு ரசிகர்களுக்கும் புது மகேஷ்பாபுவைப் பார்த்தது போல இருக்கும் என்கிறார்கள்.
புதுகெட்டப் செட்டானால் சரிதான்.