கமர்ஷியல் படங்களில் கிடைக்காத பெயர் ‘பேரன்பு’ படத்தில் கிடைத்தது – தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

ண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் “பௌவ் பௌவ்”.

லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற இந்த படம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

மார்க் டி மியூஸ் & டெனிஸ் வல்லபன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் அபிராமி ராமநாதன், எடிட்டர் மோகன் இசையை வெளியிட இயக்குனர் சசி பெற்றுக் கொண்டார்.

Related Posts
1 of 138

இந்த விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் பேரன்பு தயாரிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது, ”இந்த படத்தை பார்த்தேன், மிகச்சிறப்பாக இருந்தது.

‘பேரன்பு’ மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதை வியாபாரம் செய்ய ரொம்பவே சிரமப்பட்டேன். ஆனாலும் கேரளாவில் நீங்க பேரன்பு படத்தின் தயாரிப்பாளர் தானே எனக்கேட்டு பலரும் என்னுடன் செஃல்பி எடுத்துக் கொண்டனர். எவ்வளவோ கமர்சியல் படங்களில் கிடைக்காத ஒரு பெயர் பேரன்பு படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. அப்படி ஒரு பெயர் இந்த படத்துக்கும் கிடைக்கும்” என்றார் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன்.