குபேரா- விமர்சனம்

புத்தருக்குப் போதி மரத்தில் ஞானம் கிடைத்தது போல, தீயவர்களுக்கும் ஞானம் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுகிறார் இந்தக் குபேரா
மிகப்பெரிய ஆயில் சம்பந்தப்பட்ட ஊழல் நடைபெற இருக்கிறது. அதற்கென ஒரு பெரிய நெட்வொர்க்கை நாகார்ஜுனா துணைகொண்டு தயார் செய்கிறார் வில்லன். இவர்களுடன் திருப்பதி கோவில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் தனுஷ் எப்படி வந்து சிக்குகிறார் என்பதும், பின் எப்படி மீள்கிறார் என்பதுமே படத்தின் பரபர திரைக்கதை
நாயகன் தனுஷ் எந்த ஹீரோயிசமும் இல்லாத எளிய பிச்சைக்கார மனிதராக தன் கேரக்டரில் வாழ்ந்துள்ளார். எந்த இடத்திலும் சோல்டரைத் தூக்காத அவரின் நடிப்பு பல இடங்களில் அட போட வைக்கிகிறது. நாகார்ஜுனாவும் தன் சூப்பர் ஸ்டார் இமேஜை ஓரமாக வைத்துவிட்டு தரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். வில்லனாக வரும் ஜிம்சர்ப் கேரக்டர் பெரியளவில் எழுதப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார்.
படத்தில் பின்னணி இசை மிகப்பெரிய இம்பார்ட்டனை கிரியேட் செய்துள்ளது. சவுண்டிங் ஸ்கோரிங் என பக்காவாக வொர்க் செய்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் படம் வேறோர் எல்லையைத் தொட்டுள்ளது. கலை இயக்கம்,ஆடை வடிவமைப்பு என தொழில்நுட்ப கலைஞர்கள் Fire ஆக வேலை செய்துள்ளனர். எடிட்டர் மட்டும் இன்னும் உழைத்திருக்கலாம்
இவ்வளவு சிறப்பான மேக்கிங் இருந்தும் இரண்டாம் பாதி திரைக்கதையில் நிறைய கோட்டைவிட்டுள்ளார் இயக்குநர் சேகம் வெம்முலா. முதல் பாதியில் கனெக்ட் ஆன எமோஷ்னல் காட்சிகள் இரண்டாம் பாதியில் மனதை விட்டு விலகிவிடுகிறது. சிலபல லாஜிக் கேள்விகளும் நம்மைப் போட்டுக் குடைகின்றன. இருந்தும் தத்துவார்த்தமாகவும் அரசியலாகவும் படம் சில நல்ல விசயங்களைப் பேசியுள்ளது. அதற்காக குபேராவை ஒருமுறை தரிசிக்கலாம்
3/5