ராயன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ரத்தம் தெறிக்க தெறிக்க லாஜிக் சிரிக்க சிரிக்க ஒரு யுத்த சினிமா இந்த ராயன்

தங்கை துஷாரா தம்பிகள் சந்தீப் கிஷன்& காளிதாஸ் ஆகியோரோடு சின்ன வயதிலே சென்னை வரும் தனுஷ் செல்வராகவனின் வழிகாட்டலில் பொழைத்து தழைக்கிறார். ஆனால் அவரின் அடக்கமான வாழ்வில் இரண்டு தாதாக்களின் மோதலும் ஒரு போலீஸின் சதியும் குறுக்கே வர, பாஸ்புட் கடை நடத்தும் தனுஷ் வெப்பன்ஸை தூக்கம் சூழல் வருகிறது. முடிவு என்ன என்பதே மீதி திரைக்கதையாக விரிகிறது

Related Posts
1 of 2

எப்போதும் போல நடிப்பில் துளியும் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளார் தனுஷ். மேலும் சக கலைஞர்களை நன்றாக நடிக்கவும் வைத்து தனது 50-ஆவது படத்தில் டைரக்டராகவும் கவனிக்க வைத்துள்ளார். சந்தீப் கிஷன் காளிதாஸ் இருவரும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன். இரு பெண் கேரக்டர்களையும் சிறப்பாக வடிவமைத்த தனுஷ் இருவரையும் நன்றாக நடிக்க வைத்துள்ளார். துஷாரா ஒருபடி மேல். பிரகாஷ்ராஜ் வரலெட்சுமி சரத்குமார் ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை. எஸ்.ஜே சூர்யா ஓகே ரகம். சரவணன் கொஞ்ச நேரம் என்றாலும் நன்றாக நடித்துள்ளார். செல்வராகவன் நல்ல கேரக்டரில் நடித்து மனதில் பதிகிறார்

ஓம்.பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாசிக்கிறார். எவரி ப்ரேமிங் க்ளாசிக். க்ளைமாக்ஸ் அட்டகாசமான லைட்டிங். முன்பாதி& பின்பாதி இரண்டு பகுதிகளையும் தன் சரிபாதி என நினைத்து உழைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். சாங்ஸ்&RR சூப்பர்

எல்லா கேரக்டர்களுக்கான அறிமுகத்தையும் பின்கதைகளையும் முன்பாதியில் தெளிவாகச் சொல்லி படத்திற்குள் நம்மை ஒன்ற வைத்து கவனிக்க வைக்கிறார் இயக்குநர் தனுஷ். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி எல்லா நம்பிக்கைகளையும் உடைக்கிறது. லாஜிக் சந்தி சிரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேக்கிங்கில் காட்டிய அக்கறையை ரைட்டிங்கில் காட்டி ராயனை இன்னும் சிறப்பாக வளர்த்தெடுத்திருக்கலாம்
2.75/5