அஜித் இடத்தை பிடிக்க இன்னும் வளரணும் தம்பி! : ஜெய்க்கு டோஸ் விட்ட தயாரிப்பாளர்!

Get real time updates directly on you device, subscribe now.

jai1

ளர்ந்து வர உதவியவர்களை நினைத்துப் பார்க்கிற நல்ல மனநிலை சமீபகால இளவட்டங்கள் மத்தியில் குறைந்து வருகிறது.

அதிலும் திரையுலகில் இளவட்ட ஹீரோக்கள் சிலர் போடுகிற ஆட்டங்களை பட்டியலிட்டால் இங்கே அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகிற ரசிகர்களே கட்டையைத் தூக்கி அடிப்பார்கள்.

அந்த ஒரு சில ஹீரோக்கள் லிஸ்ட்டில் தனக்கு ஒரு இடத்தை போட்டு வைத்திருக்கிறாரோ ஜெய் என்கிற சந்தேகம் நேற்று உறுதியானது.

நேற்று மாலை வெங்கட் பிரபு இயக்கி வரும் சென்னை 600028 பார்ட் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

கிட்டத்தட்ட முதல் பாகத்தில் நடித்த விஜயலட்சுமி முதற்கொண்டு எல்லோரும் நிகழ்ச்சிக்கு ஆஜராகியிருந்தார்கள்.

ஆனால் அதே படத்தில் அறிமுகமான ஜெய் மட்டும் வரவில்லை. அப்புறம் தான் தெரிந்தது இது போன்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதில்லை என்று சொன்னாராம் ஜெய்.

இப்படி ஒரு வேலையைத் தான் நடிகர் அஜித்தும் கடந்த அரை டஜன் படங்களாக செய்து கொண்டிருக்கிறார். அவருடைய அந்த நடவடிக்கையே விமர்சனத்துக்குள்ளான நிலையில் இப்போது அவரது ரூட்டிலேயே ஜெய்யும் போக கிளம்பியிருப்பது தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு கடும் கோபத்தை கிளப்பி விட்டது.

Related Posts
1 of 11

நிகழ்ச்சியில் பேசிய அவர் அஜித் இடத்தை பிடிக்கிற அளவுக்கு ஜெய் இன்னும் வளரவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் இங்க நெறைய வளர்ந்து வர்ற ஹீரோக்கள் எல்லோரும் இருக்காங்க. இன்னும் நெறைய பேர் எதிர்காலத்தில ஹீரோ ஆவாங்க. பெருசா வருவாங்க.

அஜித் சார் எப்போதுமே ஒரு பாலிசி வெச்சிருக்கார். அவரோட படங்களுக்கு புரமோஷன் பண்ண மாட்டார். எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்க மாட்டார். முதல்ல நானெல்லாம் அதைப்பத்தி விமர்சனம் பண்ணிருக்கேன். இப்போ அதுதான் அவரோட படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில கொடுத்திருக்கு. அவரை திரையில மட்டும் தான் பார்க்க முடியும்னு ரசிகர்கள் நெனைக்கிறது தான் அவரோட படங்களின் ஓப்பனிங்குக்கு மிகப்பெரிய காரணம்.

ஆனா அவர் அப்படி ஒரு முடிவை வளர்ந்து ஒரு லெவலுக்கு வந்த பிறகு தான் எடுத்தார். உள்ளே வந்த உடனே அப்படி ஒரு முடிவை எடுத்தீங்கன்னா சரியா இருக்காது. ஆனா ஜெய் தன்னையும் அஜித் மாதிரி நெனைச்சுக்கிறார்.

அவர் மத்த தயாரிப்பாளர்கிட்ட அதைச் சொல்லியிருந்தாக் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அவரை வளர்றதுக்கு காரணமாயிருந்த வெங்கட்பிரபுவுக்கே சொன்னது தான் எனக்கு வருத்தமாயிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒரு முடிவை எடுக்கலாம். அதுக்காக அவங்க அந்த இடத்துக்கு வரணும். நான் புரமோஷனுக்கு வரமாட்டேன்னு சொல்றதுக்கு ஒரு இடத்துக்கு வந்த பிறகு தான் சொல்லணும், அவனும் என்னோட பிள்ளை மாதிரி தான். திருந்துவான்னு நெனைக்கிறேன் என்று போட்டுத் தாக்கினார் தயாரிப்பாளர் சிவா.

அவருக்கு பதில் சொல்லும் விதமாகப் பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு ”எனக்கு இந்த இடத்துல ஜெய் தேவையில்லை; அவரைத் தாண்டி நெறைய ஹீரோக்கள் இங்க என்னோட இருக்காங்க, ஒருவேளை அவரை வெச்சு சொலோ ஹீரோ படம் எடுத்திருந்தா நான் அவரைப் பத்தி யோசிச்சிருக்கலாம்” என்றார்.

வளர்ந்தது கள்ளிச் செடின்னு தெரியாமப் போயிடுச்சே..!