கோவிலாக நினைத்து வாழ்ந்த வீட்டை அகரம் அறக்கட்டளைக்காக கொடுத்த சிவகுமார் !!
நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த சென்னை தி.நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தற்போது புதிதாக கட்டியுள்ள ”லக்ஷ்மி இல்லத்திருக்கு” சென்றுள்ளனர்.
நடிகர் சிவகுமார் அவர்கள் சென்னைக்கு வந்து முதன் முதலில் வாங்கிய சொத்து இந்த வீடு தான். இந்த வீட்டில் தான் சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களின் தங்கை பிருந்தா ஆகியோர் பிறந்தனர். இந்த வீட்டில் தான் அவர்கள் மூவரின் திருமணமும் நடைபெற்றது.
பேரன், பேத்திகள் பிறந்தது இங்கே தான். இந்த வீடு சிவகுமார் அவர்களுக்கு செண்டிமெண்டாக மனதிற்கு நெருக்கமான ஒரு வீடு. இந்த வீட்டை விட மனமில்லா விட்டாலும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மகன்கள் கேட்டுக் கொண்டதால் இந்த வீட்டில் இருந்து சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ”லக்ஷ்மி இல்லத்திருக்கு” சென்றுள்ளனர்.
அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பது சிவகுமார் அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கனவு. தற்போது அந்த வீட்டை அதற்காக துவங்கப்பட்ட ”அகரம் பௌண்டேஷன்” செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
தான் கோவிலாக நினைத்து வாழ்ந்து வந்த வீடாக இருந்தாலும் தொண்டு நிறுவனமான அகரம் பௌண்டேஷன் செயல்பாட்டிற்காக முழு மனசோடு தந்திருக்கும் சிவகுமார் அவர்களின் நற்செயல் என்றென்றைக்கும் போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.
ஹாட்ஸ் ஆப் சிவகுமார் சார்..!