பிருத்வி அம்பர்-சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் ‘சௌகிதார்’!
‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் வெளியிட்டனர். ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி – இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பாவின் ஆறாவது படைப்பான ‘சௌகிதார்’ படத்தின் தலைப்பை வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சௌகிதார்’ – ஒரு பன்மொழி திரைப்படம். கன்னடத்தில் y மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகிறது.
‘சௌகிதார்’ எனும் தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதிய கதையுடன் களம் காண்கிறார். ‘அனே பாடகி ‘ படத்தில் நகைச்சுவை, ‘ரதாவரா’ படத்தில் வழிப்பாட்டு கருப்பொருள், ‘தாரகாசுர’ திரைப்படத்தில் தனித்துவமான கதை களம், ‘ரெட் காலர்’ எனும் திரைப்படத்தில் க்ரைம் திரில்லர், ‘கௌஸ்தி’ திரைப்படத்தில் கடலோர பின்னணி.. என வித்தியாசமாக வடிவமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.