பிரைம் வீடியோவில் வெளியாகும்‘சிட்டாடல்’இணையத் தொடர்!
ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் நடிகர் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் இணையத் தொடர் உருவாக்கப்பட்டது, ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த தொடரின் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என வெளியாகவிருக்கிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் பேசுகையில்,“அமேசான் ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே, சிட்டாடல் எனும் தொடரில் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியபோது, அவர் ஒரு உலகளாவிய படைப்பாக உருவாக்க விரும்பினார். – இது உலகை உண்மையாக இணைக்கும். அமேசான் பன்முகத்தன்மையை உறுதியாக நம்புகிறது, உண்மையான பன்முகத்தன்மை, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது, வெவ்வேறு தோல் நிறங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமல்ல, மக்கள் பேசும் விதத்தைக் கேட்பதன் மூலமும், உண்மையில் கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலமும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாடு மற்றும் கண்டம் முழுவதும் பரவக்கூடிய… நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது. எனவே, எனக்கு கதை கூட முழுமையாக தெரியாது, ஆனாலும் இதில் நான் நடித்திருக்கிறேன்.” என்றார்.