காத்துவாக்குல ரெண்டு காதல்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

போறபோக்குல ஒரு கதை எழுதி, வர்ற வரைக்கும் எடுப்போம்னு ஆடியன்ஸ் ரசனையை அசால்டாக நினைத்து எடுக்கப்பட்டிருக்குது காத்துவாக்குல ரெண்டு காதல்

தான் யாரைப்பார்த்தாலும் அவர்களுக்கு துரதிர்ஷ்டம் தொற்றிக்கொள்ளும் என்று நம்பும் விஜய்சேதுபதி வாழ்வில் சமந்தாவும் நயன்தாராவும் ஒரேநேரத்தில் வருகிறார்கள். அதன்பின் விஜய்சேதுபதி வாழ்வில் தென்றல் தழுவுகிறது. அதனால் அவர் இருவர் மீதும் காதலில் விழுகிறார். அவரின் அந்த I love you two கான்செப்ட் எடுபட்டதா..இல்லையா? என்பதே படத்தின் கதை

கத்திமேல் கால் வைக்கும் கதையை..புத்திமேல் பாரத்தைப் போட்டு சிரிப்பாக்க முயற்சித்துள்ளார் விக்னேஷ் சிவன். எடுத்துக் கொண்ட கதையின் கருவே அபத்தமும் ஆபத்தும் நிறைந்ததாக இருப்பதால் கதையின் கேரக்டர்கள் யாரோடும் நாம் ஒட்டவே முடியவில்லை..மாறன் கிங்க்ஸ்ட்லி ஆகியோர் காமெடி ஒருசில இடங்களில் எடுபடுகிறது. சமந்தா நயன்தாரா விஜய்சேதுபதி மூவரும் ஒன்றாக பெர்பாமன்ஸ் செய்யும் ஒரு சில இடங்களும் என்சாய் பண்ண முடிகிறது. மற்றபடி படம் முழுதும் கற்பனை வறட்சியும் கதை வறட்சியும் அப்பட்டமாக தெரிகிறது

விஜய்சேதுபதி நடிப்பில் வழமை போல் ஸ்கோர் செய்கிறார்.ஆனால் அவர் உடலை இவ்வளவு ஈசியாக கேண்டில் பண்ணுவது இது அவரின் வயதுக்கான கதை இல்லையே என்று தோண வைத்துவிடுகிறது. சம்ந்தா தான் படத்தின் எனர்ஜிடிக் வுமன். சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் கூட பின்னி பெடலெடுக்கிறார். நயன்தாராவின் நடிப்பில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை

அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை புடம் போட்டு காப்பாற்றி இருக்கிறது. ஒளிப்பதிவும் நச் ரகம்

க்ளைமாக்ஸ் உள்பட எந்த மொமெண்டும் படத்தில் சிலாகிக்கும் படி இல்லாததால் காதில் வாங்கி காற்றில் விட்டுவிடும் சுவாரஸ்யமற்ற கதையாக கடந்து போய்விடுகிறது காத்துவாக்குல ரெண்டு காதல்

2.5/5