சோனி லிவ் வெளியாகிறது “தமிழ் ராக்கர்ஸ்”!
உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் அசலாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் ஒரு திரைக்கதை அமைத்துள்ளனர். ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், தமிழ் ராக்கர்ஸ் ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் இல் ஒளிப்பரப்பாக உள்ளது.