நடிகர் ஆரி நடிக்கும் புதியபடம்
நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி ஆர் கார்டனில் இனிதே துவங்கியது.
இப்படத்தை அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார்.
எஸ்.காளிங்கன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இவர் என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்
இப்படத்திற்கு ஒளிப்பதிவு முருக சரவணன் இவர் தீரன் மற்றும் விஜய் 64 படத்திற்கு 2nd யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு யாகாவாராயினும் நாகாக்க படத்தின் இசையமைப்பாளர் பிரசன் இசை அமைக்க படத்தொகுப்பை ரிச்சி படத்தில் படத்தொகுப்பாளரான அதுல் விஜய் கவனிக்கிறார்,கலை இயக்குனராக காற்று வெளியிடை மாரி 2 போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அமரன் பணியாற்றுகிறார்.