கிளாப்- விமர்சனம்

விளையாட்டுத் துறையில் இருக்கும் சாதிய நிதர்சனத்தை விமர்சனப் பார்வையின்றி எதார்த்தமாகச் சொல்லியிருக்கும் படம் கிளாப்
ஊக்கமே ஆக்கம் ஆக்கமே எழுச்சி என்ற பாதையில் வளரும் ஆதிக்கு ஒரு விபத்தால் கால் பறிபோகிறது. ஊக்கத்தை இழந்து காதல் மனைவியோடு சரியான இணக்கமின்றி அப்பாவின் கவர்மெண்ட் வேலையோடு வாழ்ந்து வருகிறார். அவருக்கான எனர்ஜியாக வருகிறார் ஓட்டப்பந்தய வீராங்கனை கிரிஷா. தான் அடைய முடியாத உயரத்தை கிரிஷா அடைய வேண்டுமென போராடும் ஆதி முடிவில் வென்றாரா? என்பதே கதை
ஆதியின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. இயலாமையை முகத்தில் கொண்டு வரும் இடங்களில் அசத்துகிறார். ஒருகால் இல்லாத உணர்வை உடல்மொழியில் கொண்டு வருகிறார். அவரது மனைவியாக வரும் நாயகியும் நல்லதேர்வு! படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்தும் கேரக்டரில் வரும் கிரிஷாவின் நடிப்பும் அருமை
இளையராஜா தான் பின்னணி இசை என்பதை நம்பவே இயலவில்லை. பாடல்கள் எல்லாம் ஓ.கே ரகம். ஒளிப்பதிவில் சிறிய படத்திற்கான வறுமை தெரியாமல் இருப்பது ஆறுதல்.
எளிய பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு எண்ணற்ற தடைகள் வரும் என்பதை நிறைய படங்களில் சலிக்கச் சலிக்கச் சொல்லிவிட்டார்கள். அதையே தான் இந்தப்படமும் சொல்கிறது. மேக்கிங்கிலும் பெரிய மெனக்கெடல் இல்லை தான். ஆனாலும் படம் முடியும் போது நமக்குள் ஒரு எனர்ஜியை கடத்திவிடுகிறது கிளாப்.. அதனால் ஒருமுறை பார்க்கலாம்
3/5