யோகி பாபு நடிக்கும் ‘கான்ஸ்டபிள் நந்தன்’!
இந்தியத் திரையுலகம் பல ஆண்டுகளாக பல நடிகர்கள் நட்சத்திரங்களாக உயரம் அடைவதைப் பார்த்து வருகிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் யோகி பாபு பல தீவிரமான கதைக்களங்களில் கதையின் நாயகனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இப்போது வரவிருக்கும் திரைப்படமான ‘கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் கான்ஸ்டபிளாக நடிப்பதன் மூலம் ஒரு நடிகராக அடுத்த உயரத்தை எட்ட உள்ளார். இப்படத்தை ஷங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி. ஷங்கர் திருவண்ணாமலை தயாரித்துள்ளார். இயக்குநர்கள் சுந்தர் சி, சசிகுமார், மு. களஞ்சியம் படங்களில் உதவி இயக்குநராக இருந்த பூபால நடேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு (ஜூலை 7, 2024) திருவண்ணாமலை கோவிலின் ஆன்மீக சூழலில் பூஜையுடன் தொடங்கியது.