‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் மறைந்திருக்கும் சீக்ரெட் : யார் அந்த மிஸ்டர். எக்ஸ் ?

Get real time updates directly on you device, subscribe now.

dhanush

சிகர்கள் உள்ளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தான்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலும் ரசிகர்கள் மத்தியிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற ஆரம்பித்ததுமே, இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தேடும் பணியில் ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts
1 of 36

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ‘தள்ளி போகாதே’ புகழ் தாமரையின் வரிகளில், சிட் ஸ்ரீராமின் மெய் சிலிர்க்கும் குரலில் உதயமான ‘மறு வார்த்தை’ பாடல், இசை பிரியர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்று இருக்கின்றது.

Mr. X அவர்களை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என்று ரசிகர்கள் இருக்கும் இந்த நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் ‘Mr. X’ அவர்களை சமூக வலைத்தளங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இன்னும் மூன்று நாட்களில் ‘நான் பிழைப்பேனோ’ என்னும் இந்த படத்தின் மற்றொரு பாடல் வெளியாக இருக்கின்றது. ஆகவே இந்த மூன்று நாட்கள் வரை தான் Mr. X சமுக வலைத்தளங்களில் செயல்படுவார்.