செப்டம்பர் 7ல் வெளியாகிறது’லக்கி பாஸ்கர்’!

Get real time updates directly on you device, subscribe now.

பல மொழி நடிகரும் இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்களில் ஒருவருமான துல்கர் சல்மான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். 1980 களின் பிற்பகுதியிலிருந்து 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் ஒரு திரைப்படமான ‘லக்கி பாஸ்கர்’- ஐ பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி மிக பிரமாண்டமாக எழுதி இயக்குகியுள்ளார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும், படத்திற்காக தயாரிப்பாளர்கள் எண்பதுகளின் மும்பையை (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) ஹைதராபாத்தில் சில விலையுயர்ந்த மற்றும் விரிவான செட்களுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இந்தக் கதை நடக்கும் காலக்கட்டத்தை ஒத்த வங்கிகளை மிகப் பிரம்மாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளது.

Related Posts
1 of 2

மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசர், பாடல்கள் வைரலாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தை முறையே சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகின்றனர். பான்-இந்தியா திரைப்படமான ‘லக்கி பாஸ்கர்’ தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது. மேலும் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படும்.