அமெரிக்கா ஆவி குறித்து நெப்போலியன் அப்டேட்!
நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது அமெரிக்கா ஆவி படத்தின் இசை & முன்னோட்ட விழா. விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் முதன்மை நாயகன் நெப்போலியன்
விழாவில் பேசிதாவது,
”இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என
தோராயமாக 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் – டாக்டர்கள் – சயின்டிஸ்ட்- புரொபசர்ஸ்- என எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.
இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில்.. இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம்.
சிவாஜி சார் நடித்த ‘பாரத விலாஸ்: படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்.
1994 ஆம் ஆண்டில் சன் டிவி நேரலை காட்சி தொடங்கிய போது, நானும், இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிற்கு சென்று தொடங்கி வைத்தோம். அன்று முதல் எங்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. அவர் இங்கு வந்து எங்கள் படக் குழுவை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும் இங்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.