பிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும் டைரக்டர் முத்தையா!

Get real time updates directly on you device, subscribe now.

‘குட்டிப்புலி’, ‘மருது’, ‘கொம்பன்’ என தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமைகளை மட்டுமே படமாக இயக்கி வரும் டைரக்டர் முத்தையா மீண்டும் ஒரு சாதிப்படத்தை இயக்கத் தயாராகி விட்டார்.

 “தேவராட்டம்” என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து பிட்டுப்படப்புகழ் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் சூரியும் நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

Related Posts
1 of 15

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் அந்நிறுவனத்தின் 15வது திரைப்படமாகும். ‘கொம்பன்’ படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் – முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.

படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய உள்ளார். இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுகள் முடிந்தவுடன் அறிவிக்கப்படும்.