ஆளும் அதிமுக கட்சியை விமர்சிக்கிறாரா விஜய்? – ‘தளபதி 62’ கதை ரகசியம்!
‘மெர்சல்’ படத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருந்தார் நடிகர் விஜய்.
இதனால் அந்தப் படத்துக்கு தமிழக பி.ஜே.பி தலைவர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். அதனாலேயே அந்தப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
அப்படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் தமிழக அரசியலை கடுமையாக விமர்சிக்கிறாராம் விஜய். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ பன்னீர் செல்வத்தையும் விஜய் கடுமையாக விமர்சிக்கிறாராம்.
அது உண்மை தான் என்று நம்பும் விதமாக படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் அரசியல்வாதிகளாக நடிக்கிறார்கள். படத்தில் இவர்களில் ராதாரவி எடப்பாடி பழனிச்சாமியாகவும், பழ.கருப்பையா ஓ பன்னீர் செல்வமாகவும் வருகிறார்களாம். இவர்கள் இருவரும் நடத்தும் கட்சிக்கு படத்தில் அ.இ.ம.மு.க என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிப் பெயரை கொஞ்சம் மாற்றி போட்டுப் பார்த்தால், அ.இ.அ.தி.மு.க என்பது தெளிவாகத் தெரியும்.
ஏற்கனவே கத்தி படத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை துணிந்து பேசிய விஜய் மெர்சல் படத்திலும் அதைத் தொடர்ந்தார். தற்போது தளபதி 62 படத்தில் தமிழக அரசியலை விமர்சிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.